தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சிப் பூசல்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகியான சி.வி.சண்முகம் ஆகியோர் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டு வருவது கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் தோல்வி குறித்து எடப்பாடி பழனிசாமி ஒருபுறம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வரும் நிலையில், சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் தனியாகக் கூடிப் பேசி வருகிறார்.
குறிப்பாக, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி தலைமை தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக சி.வி.சண்முகம் அதிருப்தியில் இருப்பதாகவும், அதன் விளைவாகவே இந்தத் தனித்தனி ஆலோசனைகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலால் அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதா அல்லது இது தேர்தல் தோல்விக்குப் பிந்தைய வழக்கமான மாற்றமா என்ற கேள்வி தொண்டர்களிடையே எழுந்துள்ளது.
கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமாக வாய் திறக்காத நிலையில், தமிழக அரசியலில் இந்த விவகாரம் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
