சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தென் மாவட்டங்களில் மாற்றுக்கட்சியில் உள்ள நிர்வாகிகளை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் பணிகளில் அக்கட்சித் தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.
திண்டுக்கல் மாவட்ட அமமுக இளைஞர் அணி செயலாளர் குமரேசன் மற்றும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் இளையராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தென் மாவட்டங்களில் கட்சியிலிருந்து வெளியேறிய நிர்வாகிகளை மீண்டும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி (EPS) ஈடுபட்டுள்ளார். இந்த நடவடிக்கை ஓ.பன்னீர்செல்வம் (OPS) மற்றும் டி.டி.வி.தினகரன் (TTV) ஆகியோரின் பிடியை வலுவிழக்கச் செய்யும் முயற்சியாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
