வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா 30 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தினால் தன் பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பின் முகமது யூனிஸ் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். வங்கதேச நாட்டின் அதிபராக தற்போது முகமது சகாபுதீன் இருக்கிறார். இவர் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியின் போது ஷேக் கசினா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவர் ராஜினாமா செய்ததற்கான எந்த ஒரு ஆவணங்களும் தன்னிடம் இல்லை என்று கூறினார்.

இது சர்ச்சையாக மாறிய நிலையில் ஷேக் ஹசினாவுக்கு எதிரானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அதிபர் மாளிகையின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டதால் பாதுகாப்புக்காக போலீஸ் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். மேலும் ராணுவத்தினர் வலியுறுத்தலின் பெயரில் பின்னர் போராட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றனர். ஏற்கனவே வங்க தேசத்தில் ஒரு மிகப்பெரிய போராட்டம் வெடித்த நிலையில் மீண்டும் அதிபரை பதவி விலகக்கோரி போராட்டம் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.