இந்தியாவில் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு என்பது மிக அதிக அளவில் இருக்கிறது. இதன் காரணமாக அங்கு காற்று மாசுபாடை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் பட்டாசுகள் போன்றவைகளை வெடிப்பதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக அளவில் அதிக காற்று மாசுபாடு கொண்ட நகரங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவை முந்தி பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது.
அதாவது தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிக அளவில் இருக்கும் நிலையில் தற்போது பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில்தான் டெல்லியை விட அதிக அளவில் காற்று மாசுபாடு பதிவாகியுள்ளது. இந்த நகரத்தில் காற்று மாசின் அளவு 232 AQI ஆக பதிவாகியுள்ளது. இந்த பட்டியலில் டெல்லி இரண்டாம் இடத்தை பிடித்துள்ள நிலையில் இங்கு காற்று மாசின் அளவு 204 AQI ஆக உள்ளது. இதைத்தொடர்ந்து கின்காசா, வங்கதேசத்தில் உள்ள டாக்கா ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் 9-ம் இடத்தில் இந்தியாவில் உள்ள கொல்கத்தா நகரம் அமைந்துள்ளது. மேலும் இதில் நிம்மதி தரக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் முதல் 100 இடங்களில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நகரம் கூட இடம்பெறவில்லை என்பதுதான்.
