இந்தியக் கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மாவின் (Abhishek Sharma) அசுர வளர்ச்சிக்குப் பின்னால் இருப்பது, அவரது தந்தை அமைத்துக் கொடுத்த மிகவும் கடுமையானப் பயிற்சி முறை மற்றும் யுவராஜ் சிங் (Yuvraj Singh) போன்ற ஜாம்பவான்களின் வழிகாட்டுதல்தான்.
அவரது தந்தை ராஜ்குமார் ஷர்மா, அபிஷேக்கின் நாட்கள் அதிகாலை 4 மணிக்கே ஜிம், ஓட்டம், நீச்சல் போன்றப் பயிற்சிகளுடன் தொடங்கும் என்றும், அதன் பின்னரும் பேட்டிங் பயிற்சியை மட்டுமே அவர் விரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.
மொஹாலியில் பயிற்சியாளர்கள் இவரையும், இவரதுச் சிறுவயது நண்பர் சுப்மன் கில்லையும் (Shubman Gill) இளம் வயதிலேயே இந்தியாவிற்காக விளையாடுவார்கள் என்று கணித்துள்ளனர்.
அபிஷேக்கின் வளர்ச்சிக்குப் பின்னால் யுவராஜ் சிங்கின் வழிகாட்டுதல் மிக முக்கியமானது. கொரோனா பொதுமுடக்கத்தின்போது, யுவராஜ் சிங்கின் பிரத்யேகப் பயிற்சியின் மூலம் அபிஷேக்கின் ஆட்டம் மேலும் மெருகேறியது.
எனினும், யுவராஜ் மிகவும் கண்டிப்பானவர். அபிஷேக் தவறு செய்தால், இப்போதும் அவர் உடனே போன் செய்து திட்டுவார் என்றும், அபிஷேக் அவருக்குப் பயப்படுவார் என்றும் அவரதுத் தந்தை வேடிக்கையாகக் கூறினார்.
அத்துடன், பேட்டிங் லயத்தை மேம்படுத்திக் கொள்ள, பிரையன் லாரா மற்றும் யுவராஜ் ஆலோசனையின் பேரில் கோல்ஃப் விளையாட்டையும் அபிஷேக் பயிற்சியாக மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
