இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஜெய்ஸ்வால் (Jaiswal), தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது முதல் சதத்தை அடித்தப் போது, கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலி (Virat Kohli) ஆகியோர் தனக்கு வழங்கிய வழிகாட்டுதல் குறித்து மனம் திறந்துப் பேசியுள்ளார்.

“ஒவ்வொரு முறையும் ரோஹித் பாய் எங்களைத் திட்டும்போது, அதற்குள் ஏராளமான அன்பு கலந்திருக்கும்” என்றும், “ரோஹித் பாய் திட்டாவிட்டால், என்ன நடந்தது என்று ஒரு சங்கடமான உணர்வு ஏற்படும்” என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

“ரோஹித் மற்றும் விராட் பாய் அணியில் இருந்தால், நாங்கள் அனைவரும் ரிலாக்ஸாக இருப்பதாக உணர்வோம்” என்று ஜெய்ஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது, ரோஹித் சர்மா தன்னைக் “கூல்”லாக விளையாடுமாறு அறிவுறுத்தினார் என்றும், தமக்காக அவர் மறுபுறம் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தார் என்றும் ஜெய்ஸ்வால் புகழாரம் சூட்டினார்.

அதேபோல, விராட் கோலி தமக்குச் சிறுசிறு இலக்குகளைக் கொடுத்து, நாமே போட்டியை நின்று முடிக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தியதாகவும் அவர் கூறினார். சமீபத்தில் முடிந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெல்வதற்கு, ரோஹித் மற்றும் கோலி முக்கியப் பங்காற்றினர்.