துபாயில் தொடங்கியுள்ள 12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிரடியாக ரன்களைக் குவித்தனர்.
இந்திய அணியின் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 433 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டினர். இதில், இந்திய அணிக்கு முதுகெலும்பாக விளங்கிய வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 95 பந்துகளில் 171 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை வலுப்படுத்தினார். இதையடுத்து, 434 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஐக்கிய அரபு அமீரக அணி களமிறங்க உள்ளது.
