சர்வதேச அளவில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் குறுகிய காலத்திலேயே தனித்த அடையாளத்தைப் பெற்ற இந்திய பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா, பாகிஸ்தானில் இந்த ஆண்டு (2025) கூகுளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரராக முதலிடம் பிடித்துள்ளார்.

29 டி20 போட்டிகளில் 37.48 சராசரியுடன் 1012 ரன்களையும், 189.51 என்ற வியப்பூட்டும் ஸ்டிரைக் ரேட்டையும் இவர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுவாரசியம் என்னவென்றால், பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர்களான பாபர் ஆஸம், ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் ஹரீஸ் ரௌஃப் ஆகியோர் பாகிஸ்தானின் கூகுள் தேடல் பட்டியலில் முதல் 10 இடங்களில் கூட இடம்பெறவில்லை.

அபிஷேக் ஷர்மாவுக்கு அடுத்ததாக ஹசன் நவாஸ், இர்ஃபான் கான் நியாஸி, சாஹிப்ஸாடா ஃபர்ஹான் மற்றும் முகமது அப்பாஸ் ஆகியோர் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களில் இடம்பிடித்துள்ளனர்.