மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வர் அஜித் பவாரின் விமான விபத்து மரணம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ரோஹித் பவார் பல்வேறு அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

கடந்த இரண்டரை மாதங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பலமுறை சந்தித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், எத்தனை முறை இந்த மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரினீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இந்த விபத்து குறித்து விசாரித்து வரும் சிஐடி  அலுவலகத்திற்குத் தான் நேரில் சென்றபோது அங்கு விசாரணை அதிகாரிகள் கூட இல்லை என்று குற்றம்சாட்டியுள்ள அவர், இந்த வழக்கில் சிஐடி விசாரணை மிகவும் மந்தமாக இருப்பதாகவும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.