அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் இது தொடர்பாக இன்று கவர்னரை சந்தித்து பேசி உள்ளார்.

அப்போது தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னரிடம் விஜய் மனு அளித்துள்ளார்.

விஜயின் சந்திப்பை தொடர்ந்து பாஜக மாநில தலைவரான அண்ணாமலை அவர்களும் இன்று கவர்னரை சந்தித்து மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.