சவுதி அரேபியாவில் ஜலால் அல் லப்பாத் என்பவர் கடந்த 1995-ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் 15 வயது சிறுவனாக இருந்தபோது ஷியா மெஜாரிட்டி சமூகத்தின் உரிமைகளுக்காக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார். இதற்காக 2017-ஆம் ஆண்டு அவரை கைது செய்து சவுதி அரேபியா அரசு சிறையில் அடைத்தது.
அவர் மீது பயங்கரவாத அமைப்புகளை ஆதரித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த சிறப்பு குற்றவியல் நீதிமன்றம் ஜலாலுக்கு மரண தண்டனை விதித்தது. இதனால் கடந்த 21-ஆம் தேதி ஜலால் தூக்கிலிடப்பட்டார்.
உலகம் முழுவதும் இது பெரும் கண்டனங்களை குவித்த நிலையில் அம்னஸ்டி இன்டர்நேஷனல் எனும் மனித உரிமை அமைப்பு ஜலாலின் மரண தண்டனையை கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பினர் வரும்போது, ஜலால் போராட்டங்களில் பங்கேற்ற போது அவருக்கு 15 வயது.
சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என்று 2018-ல் சவுதி அரசு சட்டம் இயற்றியிருந்தும் அதை மீறி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஒரு மனித உரிமை மீறல். ஜலாலின் ஒரு சகோதரர் 2019-ஆம் ஆண்டு மரண தண்டனை பெற்றார். மற்றொரு சகோதரர் முகமது சிறையில் மரண தண்டனைக்கான நாட்களை எண்ணி கொண்டிருக்கிறார்.
