சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி மக்களைச் சந்தித்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என உறுதியுடன் தெரிவித்தார்.

அணு ஆயுத அச்சுறுத்தல்களால் இந்தியா மீது எந்த அழுத்தமும் இல்லை என்றும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வலிமையும் தன்னம்பிக்கையும் நம்மிடம் உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார். பாகிஸ்தானின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் எத்தனை முறை எழுந்தாலும், அதனால் இந்தியாவின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் யாராலும் தடுக்க முடியாது என்பதை பிரதமர் தனது உரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.