பலர் புதினா இலைகளை ஒரு நறுமண இலையாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புதினா வாசனை மனநிலைக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. புதினா சமையலில் நல்ல சுவையையும் மணத்தையும் தருவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

புதினா உணவுகளின் சுவையை கூட்டுவதற்காக  மட்டுமல்ல. நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இது முகத்தில் உள்ள முகப்பரு பிரச்சனையை போக்குகிறது.