நடிகை அனுபமா ப்ரேமம் திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார். அப்படத்திற்கு பின் அவருக்கு தமிழ், தெலுங்கில் அதிகம் வாய்ப்பு வந்து இப்போது தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். அண்மையில் பிரேமம் படத்தின் 8 வருட நிறைவை ரசிகர்கள் கொண்டாடினர்.

அனுபமா இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து அவரது போட்டோக்களை வெளியிட்டு வரும் சூழலில், தற்போது போட்டிருக்கும் பதிவு வைரலாகி வருக்கிறது. பிளாஸ்டிக் கவரை விரலில் சுற்றி மோதிரம் போன்று அணிந்துகொண்டு தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என காமெடியாக அவர் பதிவிட்டிருக்கிறார்.