இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூப் வியூஸுக்காக மக்கள் தங்களின் அறிவு, ஆரோக்கியம் மற்றும் மானம் என அனைத்தையும் அடகு வைக்கத் தொடங்கிவிட்டனர். இதற்கு முன்னால் ஆபத்தான ஸ்டண்ட்களைச் செய்து பார்த்திருப்போம், ஆனால் இப்போது ஒரு இளைஞர் செய்துள்ள காரியம் இணையவாசிகளின் வயிற்றைப் பிரட்ட வைத்துள்ளது. சாலை ஓரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு அசுத்தமான சாக்கடை கால்வாய் அருகில் அமர்ந்திருக்கும் அந்த இளைஞர், ஒரு பாத்திரத்தில் அந்த அசுத்தமான கருப்பு நிற நீரை மொண்டு, தன் தலை வழியாக ஊற்றி ஜாலியாகக் குளிக்கிறார்.
ஏதோ ஏசி பாத்ரூமில் குளிப்பது போல அவர் செய்த இந்தச் செயல், முழுக்க முழுக்க பப்ளிசிட்டிக்காகத் திட்டமிடப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. “வைரல் ஆகணும்னா சாக்கடையில கூட விழுவாங்களா?” எனப் பார்த்தவர்கள் முகம் சுளிக்கின்றனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இது என்ன புதுவிதமான ஸ்பாவா?” என்றும், “நேச்சுரல் டிரைனேஜ் தெரபி போல!” என்றும் பங்கமாகப் பழித்து வருகின்றனர். yehsonu என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, வைரல் மோகத்தில் மக்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை நிரூபித்துள்ளது.
