உத்தரபிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில் நிகழ்ந்த அற்புதமான சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தொண்டாபூர் கிராமத்தைச் சேர்ந்த அனுஜ்குமார் மற்றும் அவரது தந்தை ரோகிதாஸ் சந்திரா ஆகியோர் பத்திரப்பதிவு வேலைக்காக ரூ.80 ஆயிரம் ரொக்கத்துடன் அவுரையாவுக்கு வந்திருந்த நிலையில், அந்தப் பணப்பையை மரத்தில் ஏறிய குரங்கு ஒன்று உணவுப்பை என நினைத்து தூக்கிச் சென்றது. மரத்தின் உச்சியில் போய் உணவு இல்லையென உணர்ந்த குரங்கு, ஏமாற்றத்துடன் பணத்தாள்களை கீழே வீச, அங்கு பணமழை பொழிந்தது.
இதனை கண்ட மக்கள் நோட்டுகளை பறிக்க களத்தில் இறங்க, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில், ரோகிதாஸுக்கு ரூ.52 ஆயிரம் மட்டுமே மீண்டும் கைக்கு வந்தது; மீதமுள்ள பணம் கிழிந்தும், காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இந்த விசித்திர சம்பவத்தின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
औरैया-तहसील परिसर में बंदर ले उड़ा किसान का बैग, पेड़ पर बैठकर बंदर ने कर दी नोटों की बारिश की
बाइक की डिग्गी से बंदर ने निकाला था बैग, लोगों ने जमकर लूटे नोट, वीडियो हुआ वायरल, औरैया की बिधूना तहसील परिसर का मामला#Auraiya #Monkey #ViralVideo #ThiefMonkey #BikeBag #RuralNews… pic.twitter.com/d7hQeuOvTb
— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) August 26, 2025
“>
