நியூயார்க்கைச் சேர்ந்த பெண் ஒருவர் எலிக் கூண்டுகளை ஒத்த ஹீல்ஸ் அணிந்திருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி மில்லியன் கணக்கான பார்வைகளைக் குவித்துள்ளது. வீடியோவில், இளம் பெண் இந்த தனித்துவமான ஹீல்ஸ் அணிந்து பல்வேறு ஸ்டைல்களில் நிதானமாக நடந்து செல்கிறார். இந்த வீடியோ பார்வையாளர்களிடையே ஒரு விவாதத்தைத் தூண்டியது, சிலர் பலவிதமான கருத்தை சொல்லி விமர்சித்தனர்.

எலிகள் உண்மையாக இல்லாவிட்டாலும் அத்தகைய யோசனையை ஊக்குவிப்பது குறித்து கேள்வி எழுப்பினர். மற்றவர்கள் சிறுமியின் ஆளுமையைப் பாராட்டினர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் விவாதங்களைத் தூண்டியது, பயனர்கள் அசாதாரண ஃபேஷன் தேர்வு குறித்து பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தினர்.