இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் ‘தி கோட்’. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். சமீப காலமாக ‘தி கோட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக ஒரு செய்தி பரவி வந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ‘தி கோட்’ படத்தின் டீசர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக கூறப்படுகிறது.