அரசியலுக்கு வரும் எண்ணம் தற்போது வரை இல்லை என நடிகர் விஜய் ஆண்டனி ஓப்பனாக கூறியுள்ளார். ‘ரோமியோ’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், “அனைவரும் சேர்ந்து அரசியலுக்கு அழைத்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். நோட்டாவிற்கு மட்டும் வாக்களிக்கக் கூடாது. சிறந்தது என்று ஒன்று இருக்கும். அதற்கு வாக்களிக்க வேண்டும். வருகிற மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.