தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் ஆவார். நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் தற்போது எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் நிலையில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் திரைக்கு வர இருக்கிறது.
இந்தப் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று இரண்டாவது பாடலை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது ரசிகர்களைக் கவர்ந்து மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் விஜயின் கடைசி படம் இது என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிக அதிக அளவில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் ஈரோட்டில் நடிகர் விஜயின் பொதுக்குழு மாநாடு இன்று பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் தற்போது அவரது படத்தின் பாடலும் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக மாறியுள்ளது.
Kalathil ivan irukkum varaye
Irukkum bayame.. 🔥#OruPereVaralaaru Lyric Video
▶️ https://t.co/wed8ZfvY4V#JanaNayagan#JanaNayaganPongal#JanaNayaganFromJan9#Thalapathy @actorvijay sir @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @VishalMMishra @Lyricist_Vivek… pic.twitter.com/AmQx21KqqC— KVN Productions (@KvnProductions) December 18, 2025
