சமூக வலைதளங்களில் தற்போது ஒரு கவலையளிக்கும் காணொளி வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ராஜா சாப்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு நடிகை நிதி அகர்வால் வெளியேறியபோது, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டது. ரசிகர்கள் அலைமோதியதால் அவர் ஒரு அடி கூட முன்னால் நகர முடியாமல் நெரிசலில் சிக்கித் தவித்தார். பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் எவ்வளவோ முயன்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
அந்த இக்கட்டான சூழலில், நடிகை நிதி அகர்வாலின் மெய்க்காப்பாளர் (Bodyguard) மிகுந்த சிரமத்திற்கு இடையே விரைந்து வந்து, கூட்டத்தை விலக்கி அவரைப் பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பினார். நடிகைகளுக்கு பொது இடங்களில் போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், ரசிகர்கள் தங்களின் எல்லையை மீறக்கூடாது என்றும் சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
