ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள மேகா கிராமத்தில், 201 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பைட்டோசர் என்ற பழங்கால ஊர்வனத்தின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
இது டைனோசர்களுக்கும் முன்னர் பிந்தைய ட்ரயாசிக் மற்றும் ஆரம்ப ஜுராசிக் காலங்களில் வாழ்ந்த, முதலை போன்ற அமைப்புடைய உயிரினமாகும் என ஜோத்பூரை சேர்ந்த ஜேஎன்வியூ பூமி அறிவியல் நிறுவனத்தின் டீன் டாக்டர் வி.எஸ். பரிஹார் கூறினார்.
கிராமவாசிகள் ஆகஸ்ட் 21-ஆம் தேதி குளம் அருகே புதைபடிவத்தை கண்டுபிடித்ததைத் தொடர்ந்து அதிகாரிகளைத் தகவலளித்தனர். இது முழுமையான எலும்புக்கூடாக இருப்பதால் முக்கியமான ஆராய்ச்சி களமாக மாறியுள்ளது. இதுவரை இங்கிலாந்தில் மட்டுமே இதுபோன்ற புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவில் இது முதலாவது.
தற்போது அந்த இடம் வேலியிட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஜெய்சால்மர் மாவட்டம் இதற்கு முன்பும் டைனோசர் கால்தடங்கள் மற்றும் 180 மில்லியன் ஆண்டுகள் பழமையான மர புதைபடிவங்களுக்காக அறியப்படும் பகுதியாகும்.
