தினசரி லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். ரயிலில் ஏழை முதல் பணக்காரன் வரை அனைவரும் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நீங்கள் செலவழிக்கும் தொகைக்கு ஏற்றவாறு ரயில் பெட்டி கிடைக்கும். எனினும் 5 ஸ்டார் ஹோட்டல் உள்ளிட்ட வசதிகளை கொண்ட ரயில்கள் நாட்டில் ஓடுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?. இந்த ரயில்களின் கட்டணமானது எளிய மக்கள் பயணம் செய்ய முடியாத அளவுக்கு இருக்கிறது.

சாமானியர்கள் மட்டுமின்றி பணக்காரர்களும் பயணம் செய்வதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பார்கள். அதாவது, மஹாராஜா எக்ஸ்பிரஸ் இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆசியாவிலேயே சொகுசு ரயிலாக அறியப்படுகிறது. நவீன வசதிகளுடன்கூடிய இந்த இந்திய ரயில்வே ரயிலில் பயணம் செய்ய ரூ.20 லட்சம் செலவாகும். தாஜ்மஹால், கஜுராஹோ கோயில், ரந்தம்பூர், ஃபதேபூர் சிக்ரி மற்றும் வாரணாசி வழியே நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு உங்களை அழைத்து செல்லும். இந்த ரயில் 7 நாட்களில் தன் பயணத்தை நிறைவு செய்கிறது. ரயிலில் டீலக்ஸ் கேபினுக்கான கட்டணமானது $800ல் இருந்து தொடங்குகிறது. அதேநேரம் தனி அறை கொண்ட வகுப்பு கட்டணம் $2500ல் இருந்து தொடங்குகிறது.