சமூக வலைதள உலகம் மிகவும் வினோதமானது. இங்கு எப்போது, என்ன வீடியோ வைரலாகும் என்று சொல்லவே முடியாது. இப்போது, ஒரு இளைஞனின் வித்தியாசமான யோசனை ஒன்று இணையத்தில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோவில், சில பெண்கள் காய்கறிகள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வரும் ஒரு இளைஞன், காய்கறி வாங்குவதற்காக கொண்டு வந்த பையைப் பார்த்து எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
😂😂🤞 pic.twitter.com/kItzSL1nER
— ALEENAOFFICAL (@proaleena) November 9, 2025
அந்த இளைஞன், பைக்குப் பதிலாக உள்ளாடையை (Underwear) கொண்டு வந்திருந்தான். அவன் அந்த உள்ளாடையை கீழே முடிந்து, அதனுள் சௌகரியமாக காய்கறிகளை நிரப்பிக் கொண்டிருந்தான். இந்த அலாதியான யோசனையைக் கண்ட அங்கிருந்த பெண்களும் சிரிப்பை அடக்க முடியாமல் போனது. இந்த வேடிக்கையான வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த பலர், “மார்க்கெட்டில் புதுசா வந்த பேக் போல இருக்கு” என்றும், “இதைப் பார்த்த பிறகு வயிறு வலிக்கிறது” என்றும் நகைச்சுவையாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
