சமூக ஊடகங்களில் தினமும் பல வீடியோக்கள் மக்களை மகிழ்விக்கின்றன. இப்போது, ஒரு சிறிய குழந்தையின் நடனம் அனைவரது மனதையும் வென்று வைரலாகி வருகிறது. ஒரு மேடை நிகழ்ச்சியின் போது, ஒரே மாதிரியான உடையில் இருந்த சிறுவர்கள் குழுவாக நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அந்தச் சிறுவர்களில் ஒருவனின் பேண்ட் கீழே இறங்கிவிடுகிறது.

இதைக் கண்ட பார்வையாளர்கள் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், பின் சிரிக்கத் தொடங்கினர். ஆனால், அந்தச் சிறுவன் கொஞ்சமும் பதட்டப்படாமல் தன் நடனத்தை நிறுத்தவில்லை. பேண்ட் கணுக்கால் வரை தொங்கினாலும், அவன் அதைச் சரிசெய்ய முயற்சிக்கவில்லை; மாறாக, தன் நடன அசைவுகளை முழு நம்பிக்கையுடன் முடித்தான்.

இந்தச் சிறுவனின் தொழில்முறை அணுகுமுறையை (Professionalism) கண்டு நெட்டிசன்கள் பாராட்டுகின்றனர். “எவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு தன்னம்பிக்கை!” என்றும், “ஷோ நிற்கக் கூடாது என்பதே இவன் காட்டும் உண்மையான நடிப்பு” என்றும் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.