திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் திருவிழா காலங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். கடந்த மாதம் டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கோல் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் கோவிலில் இருக்கும் அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது.

இதில் கலைக் கல்லூரி பணியாளர்கள், மாணவ மாணவிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதனையடுத்து காணிக்கை மூலம் வருவாயாக 1 கோடியே 95 லட்சத்து 94 ஆயிரத்து 39 ரூபாயும், தங்கத்தால் ஆன பொருட்கள் 475 கிராம், வெள்ளி 6,348 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 283 ஆகியவை கிடைத்துள்ளது. 2-வது நாளாக இன்றும் உண்டியல் பணம் எண்ணும் பணி நடைபெறுகிறது.