தளபதி விஜய் முதன் முறையாக தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருடன் கூட்டணி சேர்ந்துள்ள படம் தான் “வாரிசு”. இந்த படம் நாளை ஜனவரி 11ம் தேதி தமிழில் ரிலீஸ் ஆகிறது. ஆனால் தெலுங்கில் வருகிற 14 ஆம் தேதி தான் வெளியாகும் என தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் வாரிசு திரைப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும், போட்டிக்கு துணிவு படம் ரிலீஸ் ஆவதால் தமிழகத்தில் தியேட்டர்கள் இரண்டு படங்களுக்கும் பாதி பாதி தான் கிடைத்துள்ளது.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் சம்பளம் குறித்த விவரம் வெளிவந்திருக்கிறது. விஜய்க்கு மட்டுமே 110 கோடி சம்பளம் என்றும்  ஹீரோயின் ராஷ்மிகாவுக்கு 4 கோடி தரப்பட்டு இருக்கிறது என்றும் தெரிகிறது. அத்துடன் சரத்குமாருக்கு ரூ.2 கோடி, பிரகாஷ்ராஜ்க்கு 1.5 கோடி, ஷாமுக்கு 1 கோடி என பல நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கி இருக்கின்றனர். மேலும் யோகிபாபு 35 லட்சம், குஷ்பூ 40 லட்சம், ஜெயசுதாவுக்கு 30 லட்சம் என சில நடிகர்களுக்கு லட்சங்களில் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.