பார்ட்டியில் ராஷ்மிகாவுடன் விஜய் தேவரகொண்டா இருந்ததாக பேசப்பட்டு வருகின்றது.

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா. இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இத்த திரைப்படம் நாளை ரிலீசாக உள்ளது. இதனிடையே ராஷ்மிகா நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பதாக பேச்சுக்கள் கிளம்பியது. மேலும் அவருடன் வெளியே சுற்றுவதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது. சென்ற சில மாதங்களுக்கு முன்பாக மாலத்தீவுக்கு ஜோடியாக சென்றிருந்ததனர்.

அண்மையில் வெளியான போட்டோக்கள் மூலம் அது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் நியூயர் பார்ட்டியில் ராஷ்மிகா  ரசிகர்களுடன் லைவ் வீடியோவில் பேசியிருந்தார். அப்போது பல விஷயங்கள் குறித்து பேசினார். அதில் ரசிகர் ஒருவர் உங்களின் வயது என்ன என கேட்டதற்கு 26 என தெரிவித்தார். அப்போது அவர் அருகில் மற்றொரு நபரின் குரல் கேட்கின்றது. அது விஜய் தேவரகொண்டாவின் குரல் தான். இதனால் இருவரும் ஜோடியாக புத்தாண்டு பார்ட்டிக்கு சென்று இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றார்கள்.