தமனின் பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றார்கள்.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வரும் ஜன-11 தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் இசையமைப்பாளர் தமன் விஜயுடன் இருக்கும் போட்டோவை இணையத்தில் பதிவிட்டு இருக்கின்றார். அந்தப் பதிவில் தமன் தெரிவித்துள்ளதாவது, வாரிசு திரைப்படத்தின் அனைத்து எமோஷனல் காட்சிக்கும் என் இதயத்தில் இருந்து அழுதேன் அண்ணா. கண்ணீர் விலைமதிப்பற்றது. வாரிசு திரைப்படம் என் குடும்பம் அண்ணா. இது என் இதயத்திற்கு நெருக்கமானது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி அண்ணா என பதிவிட்டிருக்கின்றார். இதனை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றார்கள்.