கிரிக்கெட் உலகமே வியந்து பார்க்கும் வகையில், இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் ஒரு பிரம்மாண்ட சாதனையைச் செய்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக்கோப்பை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மைதானத்திற்கு வெளியே 122 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த ட்ரோனில் (Drone) இருந்து போடப்பட்ட பந்தை பட்லர் லாவகமாகப் பிடித்து அசத்தியுள்ளார். கிரிக்கெட் வரலாற்றிலேயே இவ்வளவு உயரத்தில் இருந்து போடப்பட்ட பந்தைப் பிடித்தது இதுவே முதல்முறை என்பதால், இது மிகப்பெரிய உலக சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

​இந்தச் சவாலான கேட்ச்சை எடுக்கும்போது பட்லரின் கவனம் மற்றும் டைமிங் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதற்கு முன்பு 2021-ல் ஆஸ்திரேலிய வீரர் திமோதி ஷானன் 119.86 மீட்டர் உயரத்தில் இருந்து போடப்பட்ட பந்தைப் பிடித்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை முறியடித்துள்ள பட்லர், விரைவில் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடிக்க உள்ளார். இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் இந்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் பகிர, தற்போது அது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.