தைரியம், முயற்சி, பயிற்சி இருந்தால் இந்த உலகத்தில் எதையும் சாதிக்கலாம் என்று தனது குஞ்சுகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் ஒரு தாய் கோழியின் அசாத்திய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு சாதாரண ரோட்டோர மரத்தின் கீழே அந்தத் தாய் கோழியும், அதைச் சுற்றி ஐந்து சிறிய குஞ்சுகளும் இருக்கும் நிலையில், ‘நாம் நினைத்து முயற்சி செய்தால் எதையும் நடத்திக் காட்டலாம்’ என்ற தத்துவத்தை உணர்த்துவது போல, அந்தத் தாய் கோழி திடீரென பறந்து சென்று மேலே இருக்கும் மரக்கிளையின் மீது கம்பீரமாக அமர்கிறது.
இதைப் பார்த்ததும் சிறிதும் பயப்படாமல், தனது அம்மாவின் செயலைத் தீவிரமாகப் பயிற்சி செய்து பார்த்த அந்த ஐந்து சின்னஞ்சிறு குஞ்சுகளும், அடுத்தடுத்து சிறகடித்துப் பறந்து நேராக அந்த மரக்கிளையிலேயே போய் அமரும் அந்த காட்சிகள் பார்ப்பவர்களைப் வியப்படைய வைத்துள்ளது.
தைரியம்.முயற்சி.பயிற்சி,இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று தனது குஞ்சுகளுக்கு சொல்லிக் கொடுக்கும் தாய் கோழிpic.twitter.com/0SlyKaUkBm
— Rajini (@rajini198080) June 29, 2026
“>
விலங்கினங்கள் கூடத் தன் தலைமுறைக்கு எவ்வளவு பெரிய தன்னம்பிக்கையைக் கற்றுக் கொடுக்கிறது என்பதை விவரிக்கும் இந்த வீடியோ, சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு அனைவரையும் கவர்ந்து வருகிறது.
