ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindhoor) தோல்வியின் வடு ஆறுவதற்கு முன்பே, பாகிஸ்தான் மீண்டும் தனது போர் வெறியைத் தூண்டிவிட்டுப் பார்க்கும் வேலையில் இறங்கியுள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப், இந்தியாவுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டால் எல்லைப் பகுதிகள் அல்லது மும்பை, டெல்லி போன்ற நகரங்களோடு நிறுத்திக்கொள்ள மாட்டோம்; கிழக்கிந்தியாவின் மிகப்பெரிய நகரமான கொல்கத்தாவையும் நேரடியாகத் தாக்குவோம் என்று பகீர் அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.

சியால்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா இனி எந்தவொரு துணிச்சலான நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என்றும், மீறினால் கொல்கத்தா மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அர்த்தமற்ற முறையில் உளறியுள்ளார்.

ஏற்கனவே தனது சொந்த நாட்டுப் பொருளாதாரத்தைச் சமாளிக்க முடியாமல் திணறி வரும் பாகிஸ்தான், தற்போது கொல்கத்தாவை இழுத்துத் தனது பயத்தை வெளிப்படுத்தி வருவது சர்வதேச அளவில் நகைப்புக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

மேலும், பாகிஸ்தானை உலக அளவில் அசிங்கப்படுத்த இந்தியா ஒரு ‘போலித் தாக்குதல்’ (False Flag Operation) நடத்தத் திட்டமிட்டு வருவதாகவும், இதற்காகப் பாகிஸ்தான் குடிமக்களையே இந்தியா பயன்படுத்தி வருவதாகவும் குவாஜா ஆசிஃப் எவ்வித ஆதாரமுமின்றிப் புலம்பியுள்ளார்.

இதற்கு முன்னதாகப் பேசிய இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத வாலை நீட்டினால், அது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பலத்த பாடம் கற்பிக்கப்படும் என்று மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ராஜ்நாத் சிங்கின் அதிரடிப் பேச்சால் மிரண்டு போயுள்ள பாகிஸ்தான், தற்போது கொல்கத்தா வரை தங்களது தாக்குதல் எல்லை இருக்கும் என வெற்று மிரட்டல் விடுத்து வருவதாகப் பாதுகாப்புத் துறை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.