மதுரையில் நடைபெற்ற தவெக இரண்டாவது மாநில மாநாடு, இந்திய அரசியல் வரலாற்றிலேயே அதிக மக்கள் திரண்ட மாநாடாக ஆங்கில ஊடகங்களால் குறிப்பிடப்பட்ட நிலையில், நடிகர் விஜய் தனது அடுத்த அரசியல் நகர்விற்கு தயாராகி வருகிறார். “உங்க விஜய்” என தொண்டர்களிடையே பரவலான வரவேற்பை பெற்ற விஜய், தற்போது கோவை மாநாட்டுக்காக தயார் ஆகிறார். இது தவெக வளர்ச்சி பாதையில் முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது.

தவெகவின் அடுத்த மாநாடு கொங்கு மண்டலத்தின் முக்கிய பகுதியான கோவையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கு தற்போது அதிமுக வலுவாக நிலைத்திருப்பதுடன், திமுகவும் இடத்தை பிடிக்க விரும்பி வருகிறது. இந்நிலையில், விஜய்யின் கோவை மாநாடு இரு கட்சிகளுக்கும் பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

விஜய் ஏற்படுத்தும் திரளான மக்கள் வரவேற்பும், அவரது அரசியல் பாதையை வலுப்படுத்தும் வகையில், கொங்கு மண்டல அரசியல் கணக்குகளை முற்றிலும் மாற்றும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
