மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள முள்ஷி தாலுகாவின் காசர் அம்போலி கிராமத்தில் வசிக்கும் 70 வயதான சகுந்தலா சுதார் என்ற மூதாட்டி, தன்னுடைய வீட்டில் நுழைந்த பாம்பை சிறிதும் அஞ்சாமல் தன்னுடைய கைகளால் பிடித்து கழுத்தில் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வயதான பாட்டி காட்டிய இந்த சாகசம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில், தன்னுடைய வீட்டில் வந்த பாம்பை சிறிதும் பயப்படாமல் கையாளும் சகுந்தலா பாட்டியின் செயல் பார்வையாளர்களை கண்களை பெரிதாக்க வைத்துள்ளது. பாம்புகள் பற்றிய தவறான புரிதலை மாற்ற வேண்டும் என்பதற்காகவே அவர் இந்த செயலைச் செய்ததாக கூறப்படுகிறது.
पुणे के मुलशी तालुका के कासर अंबोली गाँव में 70 वर्षीय शकुंतला सुतार का साहसिक वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है। दादी ने अपने घर में निकले धामन साँप को बिना किसी डर के पकड़ा और जागरूकता फैलाने के लिए उसे गले में डाल लिया। 70 साल की उम्र में ऐसा साहसिक कदम उठाना लोगों को बेहद… pic.twitter.com/dug0teGoUX
— ABP News (@ABPNews) July 27, 2025
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருவதுடன், பலரும் அவருடைய துணிச்சலுக்கும் விழிப்புணர்வுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். 70 வயதிலும் இந்த அளவிற்கான தைரியம் பாராட்டதற்குரியது என நெட்டிசன்கள் கமெண்ட்களில் பதிவிட்டு வருகின்றனர்.
