குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்திலுள்ள கிராமத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் பார்ப்போரைக் உறையவைக்கும் ஒரு பயங்கரச் சம்பவம் நடந்துள்ளது.
கால்நடை மேய்ப்பவரான காலுபாய் போகாபாய் காம்ரா என்பவர் தனது வீட்டின் அருகே இருந்தபோது, திடீரென மூன்று காட்டுச் சிங்கங்கள் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துள்ளன. இதில் ஒரு சிங்கம், காலுபாயை நேரடியாகத் தாக்கித் தரையில் தள்ளியுள்ளது.
அந்தச் சிங்கம் காலுபாயின் காலைத் தனது தாடைகளாலும் கூர்மையான நகங்களாலும் கொடூரமாகக் கவ்விப் பிடித்திருந்தது. மரணத்தின் விளிம்பில் இருந்த காலுபாய், பயந்து அலறாமல் ஒரு விசித்திரமான மற்றும் தைரியமான முயற்சியை மேற்கொண்டார்.
சிங்கத்தை அமைதிப்படுத்துவதற்காக, அதன் முதுகைத் தனது கைகளால் மெதுவாகவும் அன்பாகவும் தடவிக் கொடுத்து, தன்னை விட்டுவிடுமாறு உயிர்பிச்சை கேட்டுள்ளார்.
માલધારી ઉપર સિંહણનો હુમલો!
ભાવનગરના પાલિતાણામાં માલધારી પરિવાર ઉપર સિંહણના હુમલાનો વિડીયો સામે આવ્યો.
અડધા કલાક સુધી માલધારી ભાઈને પકડી રાખ્યા હતા. એ બાદ ઇજાગ્રસ્તને સારવાર હેઠળ હોસ્પિટલ લઈ જવાયા. pic.twitter.com/ZOoYaMEkfd
— Sagar Patoliya (@kathiyawadiii) July 6, 2026
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், சிங்கத்தை நோக்கி கற்களை வீசியும், குச்சிகளால் சத்தம் எழுப்பியும் விரட்ட முயன்றனர். மக்களின் தொடர் கல்வீச்சு மற்றும் கூச்சலுக்குப் பிறகு, சிங்கம் அவரை விட்டுவிட்டு அங்கிருந்து ஓடியது.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த காலுபாய், பலிதானா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 20 நாட்களில் மட்டும் அந்தப் பகுதியில் நடக்கும் 4-வது சிங்கத் தாக்குதல் இது என்பதால், வனத்துறையின் அலட்சியத்தைக் கண்டித்துக் கிராம மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
