தன் கணவனின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததால், வீட்டில் ரகசிய கேமரா வைத்து அவரது உண்மையான முகத்தை மனைவி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும், எட்டா பகுதியைச் சேர்ந்த சிவம் குப்தா என்பவருக்கும் கடந்த 2024 பிப்ரவரி 19 அன்று திருமணம் நடைபெற்றது. ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.2.5 லட்சம் சம்பளம் வாங்கும் சிவம் குப்தாவிற்கு, திருமணத்தின் போது பெண் வீட்டார் பெரும் சீர்வரிசைகளைச் செய்துள்ளனர். ஆனால், திருமணமான சில நாட்களிலேயே கூடுதலாக ரூ.50 லட்சம் கேட்டு அந்தப் பெண்ணைச் சிவம் குப்தா தரப்பினர் சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.
திருமணத்திற்குப் பிறகு தனது கணவர் அடிக்கடி ஆக்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாகத் தங்குவதையும், அங்கு அறிமுகம் இல்லாத இளைஞர்கள் அடிக்கடி வந்து செல்வதையும் அந்தப் பெண் கவனித்துள்ளார். கணவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால், அந்தப் பெண் யாருக்கும் தெரியாமல் அந்த வீட்டில் ரகசிய கேமராக்களைப் பொருத்தினார். அதில் பதிவான காட்சிகள் அந்தப் பெண்ணை நிலைகுலையச் செய்துள்ளன. தனது கணவர் சில இளைஞர்களுடன் ஓரினசேர்க்கையில் ஈடுபடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்துக் கணவரிடம் கேட்டபோது, “இதை யாரிடமாவது சொன்னால் உன்னைக் கொன்றுவிடுவேன்” என அவர் மிரட்டியதாகப் பெண் தரப்பில் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் போலீசார் இந்தப் புகாரை ஏற்க மறுத்த நிலையில், மாவட்ட உயர் அதிகாரிகளைப் பெண் சந்தித்துப் புகார் அளித்தார். அதன்பிறகே விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் பெண் கொடுத்துள்ள ஆதாரங்கள் மற்றும் மின்னணு சாட்சியங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வரதட்சணை கொடுமை மற்றும் கணவரின் விபரீத நடத்தைகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குடும்பத்தினர் முன்னிலையில் உண்மையை உடைத்ததால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அந்தப் பெண் பாதுகாப்பு கோரியுள்ளார்.
