ராமநகரா மாவட்டம் மாகடி தாலுக்காவில் உள்ள குடேமரனஹள்ளி ஹேண்ட் போஸ்ட் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 55 வயதான அம்பிகா என்ற பெண்மணி, தனது தோழியைச் சந்திப்பதற்காக அங்குள்ள ஒரு பேக்கரிக்கு வந்து வாசலில் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு ஜூஸ் குடித்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள், யாராவது பார்க்கிறார்களா என்று கூடக் கவலைப்படாமல், மின்னல் வேகத்தில் அம்பிகாவின் கழுத்தில் இருந்த 55 கிராம் தங்கச் செயினைப் பறித்துக் கொண்டு தப்பினர். அந்தச் சில நொடிகளில் என்ன நடந்தது என்று அங்கிருந்தவர்கள் சுதாரிப்பதற்குள்ளேயே, அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து மாயமாகிவிட்டனர்.
இழந்த தங்கத்தின் மதிப்பு பல லட்சங்களைத் தாண்டும் என்பதால், பாதிக்கப்பட்ட பெண்மணி நிலைகுலைந்து போயுள்ளார். இந்தக் கொள்ளைச் சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஜூஸ் குடிப்பது போல நடித்து, பின் சாமர்த்தியமாகத் திருடிச் செல்லும் காட்சிகள் இப்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது.
Two thieves, posing as customers while sipping cold drinks at a bakery in Gudemaranhalli Hand Post, stole a woman’s gold chain and fled the scene. The entire incident was captured on CCTV.
Police have launched an investigation.#ChainSnatchers #CCTV pic.twitter.com/QyIq8jEtXs— ಸನಾತನ (सनातन) (@sanatan_kannada) March 28, 2026
குடூரு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். “நகரப் பகுதிகளைத் தாண்டி இப்போது கிராமப்புறங்களிலும் செயின் பறிப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருவது பயமாக இருக்கிறது” என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாகப் பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது அதிக நகைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும் எனப் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
