விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்தே கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். தினம்தோறும் புதுவிதமான தலைப்புகளுடன் விவாதிக்கப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் ப்ரோமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது இந்த வாரம் 90ஸ் கிட்ஸ், 2k கிட்ஸ் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று உள்ளது.

இதில் இரு தரப்பினரும் விவாதிப்பது தான் இந்த வாரம் நிகழ்ச்சி. பொதுவாக நாம் வாழ்ந்த தருணத்தில் சிறிய சிறிய சுவாரசியங்கள் நிறைந்த விளையாட்டுகளை தற்போது நினைத்தாலும் அது மகிழ்ச்சியாக இருக்கும். அதன்படி ரசனையை புராணம் என்று கூறி அசட்டை செய்யும் இளைஞர்களின் பேச்சையும், அதற்கு தொகுப்பாளர் கோபிநாத் கொடுக்கும் ரியாக்ஷன் குறித்த காணொளி தற்போது வெளியாகியுள்ளது.