சமீப காலமாக, பொது இடங்களில் காதல் வெளிப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு தற்போது ஹைதராபாத்தில் நடந்த ஒரு சம்பவம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, ஹைதராபாத்தில் உள்ள அரங்கர் மேம்பாலத்தில் ஒரு இளைஞர் மற்றும் இளம் பெண் பைக்கில் அமர்ந்து செல்லும் போது, மிக ஆபத்தான முறையில் காதலை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த இளைஞன், அந்த பெண்ணை பைக்கில் எதிரே அமர வைத்துக் கொண்டு வாகனத்தை ஓட்டினார். இதுவரை இருந்தாலும் பரவாயில்லை, பின் இருவரும் ஓடும் பைக்கில் சாலையே மறந்துவிட்டு முத்தமிட ஆரம்பித்தனர்.
இந்த சம்பவத்தை பின்னால் பயணித்த ஒருவர் தங்கள் மொபைலில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. பஸ்கள், கார்கள் மற்றும் மற்ற வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் சாலையில், இந்த ஜோடியின் இவ்வகையான காதல் ஸ்டண்ட் அனைவரிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
రోడ్ల మీద వికృత చేష్టలు
హైదరాబాద్ – ఆరాంఘర్ ఫ్లై ఓవర్ మీద రొమాన్స్ చేస్తూ బైక్ నడిపిన ప్రేమ జంట pic.twitter.com/MdCnXmKW5j
— Telugu Scribe (@TeluguScribe) July 14, 2025
“>
நெட்டிசன்கள் பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். “மனித உயிரின் மதிப்பை உணராதவர்கள், காதலை இந்த அளவுக்கு வீணாக்கக்கூடாது” என்றும், “இதை ஸ்டைல் அல்லது உணர்ச்சி என எடுத்துக் கொள்ளாமல், நியாயமான முறையில் பொது இடங்களில் நடத்த வேண்டும்” என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
