இதனால்தான் ரயில்கள் தாமதமாகின்றன என்றும், இதற்கு லோகோ பைலட்டுகள் ரயில் ஓட்டுநர்கள் பொறுப்பல்ல என்றும் ஒரு லோகோ பைலட்டே சிஸ்டத்தின் உண்மை நிலையை வெளிப்படையாக உடைத்துப் பேசியுள்ளார்.சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

மேலும் பொதுவாக ரயில்கள் தாமதமாக வரும்போது பயணிகள் அனைவரும் ஓட்டுநர்களைக் குறை கூறுவது வழக்கம். ஆனால், தங்களின் கட்டுப்பாட்டையும் மீறி, ரயில்வே நிர்வாகத்தின் உள் கட்டமைப்பு மற்றும் சிக்னல் குறைபாடுகள் போன்ற முறையற்ற சிஸ்டமே ரயில்களின் தாமதத்திற்கு முதன்மைக் காரணம் என்பதை அவர் விளக்கியுள்ளார்.

“>

இதை தொடர்ந்து பேசிய அவர், தங்களுக்குக் கொடுக்கப்படும் கடுமையான பணிச்சுமை மற்றும் அழுத்தங்கள் குறித்தும், பாதுகாப்பு விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் தாங்கள் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார். விபத்துகளைத் தவிர்க்க வேகக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது மற்றும் சிக்னல்களுக்காகக் காத்திருப்பது போன்ற காரணங்களால் தான் ரயில்கள் தாமதமாகின்றனவே தவிர, ஓட்டுநர்களின் அலட்சியத்தால் அல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் தங்களது தொழில்நுட்பங்களையும் வழிமுறைகளையும் மேம்படுத்தாத வரை, இந்தத் தாமதங்களுக்கு லோகோ பைலட்டுகளைப் பலிகடா ஆக்குவது நியாயமற்றது என்றும் அவர் அந்தச் செய்தியில் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.