நடிகை கனகா கரகாட்டகாரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் பெயர் தான் இவருக்கு தற்போது வரை கரகாட்டக்காரன் கனகா என்றே ரசிகர்களால் அடையாளம் காணும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இவர் கடந்த 20 வருடங்களாக திரையுலகை விட்டு விலகியே இருக்கிறார் காதல் தோல்வியாழ் திருமணம் செய்து கொள்ளாமலேயே நடிகை கனகா வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி உடல்நல பிரச்சினையாலும் இவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கனகா குறித்து படத்தின் இயக்குநர் கங்கை அமரன் கூறியதாவது, கனகா தற்போது தனி அறையில் வாழ்ந்து வருவதை கேள்விப்பட்டு தொடர்பு கொண்டேன், அழைப்பை ஏற்கவில்லை. அவர் வாழ்வில் ஏதோ நிகழ்ந்துள்ளதால், விரக்தியால் யாரும் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அவர் சாப்பாட்டுக்கு என்ன செய்கிறார் என தெரியவில்லை. தினமும் பால்காரர் மட்டுமே அவர் வீட்டில் பால் போட்டு செல்கிறார் என்று கூறினார்.