திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, குஷ்புவை மிக இழிவான வார்த்தைகளை கூறி விமர்சித்தார். இதுகுறித்து பேசிய குஷ்பு, “கலைஞர் கால திமுக வேறு, பெண்களை இழிவாக பேசுவதுதான் இப்போதைய ஸ்டாலின் திமுக. இப்படி பேசுவதற்காகவே திமுக சிலருக்கு தீணி போட்டு வளர்க்கிறது. முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணை யாராவது இப்படி பேசியிருந்தால் அவர் சும்மா இருப்பாரா?” என ஆவேசமாக பேசி கண்கலங்கினார்.