பெங்களூரைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்குக் குழந்தை இல்லாத நிலையில், அந்த இளம்பெண் தீவிர உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

மேலும் உடல் பருமன் காரணமாக சமூகத்திலும் குடும்பத்திலும் ஏற்பட்ட மன அழுத்தமும், நீண்ட நாட்களாகியும் குழந்தை இல்லாத ஏமாற்றமும் அந்தப் பெண்ணை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர், யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் பருமன் மற்றும் உருவக் கேலி சார்ந்த மன அழுத்தங்கள் மனிதர்களை எவ்வளவு தூரம் விபரீதமான முடிவுகளை நோக்கித் தள்ளுகின்றன என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.