நடிகர் விஷால் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியிலும் உள்ளார்.

இந்நிலையில் சென்னையில் விவசாய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், ‘என் படங்கள் வெளியாகும் சமயம் எல்லாம். ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் என விவசாய குடும்பங்களுக்கு ஒதுக்கி வருகிறேன்’ என  பெருமிதம் தெரிவித்தார். விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும் என்பது மிகவும் உண்மையானது. விவசாயிகளுக்காக நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்றார்.