நடிகரும் பிரபல இயக்குனருமான மனோபாலா புதன்கிழமை அன்று காலமானார். இவருடைய இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர். முதல்வர் மு க ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை என அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் ரஜினி, கமல், சத்யராஜ், விஜய், ஆர்யா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் அவருக்கு இரங்கல் தெரிவித்த இசைஞானி இளையராஜா, “என்னை பார்ப்பதற்காக கோடம்பாக்கம் மேம்பாலத்தில் காத்துக் கிடந்த இயக்குநர்களுள் மனோபாலாவும் ஒருவர்” என்று கூறியிருந்தார். இதனை மிகவும் தலை கனமான பேச்சாக மனோபாலா ரசிகர்கள் பார்க்கின்றனர். இளையராஜா ரசிகர்கள் அல்லாத பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.