உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதில் பல அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் இதில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு, ராமஜென்ம பூமி தீர்த்த அறக்கட்டளை பரிசுத்தொகுப்பு ஒன்றை அளிக்க உள்ளது.

இதில் என்னென்ன பொருள் இருக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அதில் பிரசாதத்துடன், ராமர் கோயில் புகைப்படம், காவி துண்டு, 500 கிராம் லட்டு, ராமர் உருவம் பொறித்த நாணயம், சிறிய கண்ணாடி குடுவையில் புனித மண் ஆகியவை இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.