அமெரிக்காவில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி அலாஸ்கா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 737 விமானத்தின் கதவு நடுவானில் உடைந்த விழுந்த சமயத்தில் சீனாதன் பேட்ஸ் என்பவரின் ஐபோன் 16 ஆயிரம் அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தது. சில மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கிடைத்த ஐபோன் எந்தவித சேதாரமும் இல்லாமல் பழக்கம் போல இயங்கி உள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில், சுமார் ஒன்பது கோடி பார்வையாளர்களைக் கடந்து இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.