கூகுளின் புதிய ‘நானோ பனானா புரோ’ (Nano Banana Pro) என்ற கருவி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த AI கருவி, ஒருவரின் உண்மையான கையெழுத்தைப் படித்து, அந்தக் கையெழுத்திலேயே பதில்களை எழுதி உருவாக்கும் திறன் கொண்டது.

​ஒரு பயனர் X தளத்தில் பகிர்ந்த படத்தில், அவர் கைகளால் எழுதிய ஒரு கணிதக் கேள்வியின் புகைப்படத்தை இந்த AI-க்குக் கொடுத்தபோது, அது கேள்விக்குச் சரியாகப் பதிலளித்தது மட்டுமின்றி, பதிலை அதே கையெழுத்தில் திரும்ப எழுதித் தந்துள்ளது.

​இந்தச் செயல்பாடு பயனரின் எதிர்பார்ப்பை மீறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இனி மாணவர்கள் இதை மிகவும் விரும்புவார்கள்” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.