தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அப்பனசாமி என்ற 37 வயது நபர் வசித்து வருகிறார். இவர் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுவர் சிறுமிகளுக்கு சிலம்ப பயிற்சி கொடுத்து வந்தார். இந்த நிலையில் அவர் சிலம்ப பயிற்சிக்காக வந்த ஒரு 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
அவர் பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமின்றி ஆசை வார்த்தைகள் பேசி தன் வீட்டிற்கு அழைத்து வந்தும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிலம்ப பயிற்சியாளரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
