சமூக ஊடகங்களில் அடிக்கடி வெளியாகும் வீடியோக்கள், பொது இடங்களில் சிலர் காட்டும் ஒழுங்கீனமான நடத்தைக்கு மீண்டும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளன. சமீபத்தில், திறந்திருக்கும் உணவுப் பட்டியில் இருந்து நேரடியாக தனது நாய்க்கு உணவளிக்கும் ஒரு பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி, பரவலான கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில், உணவுப் பாரில் மக்கள் தங்கள் உணவை எடுக்கும் இடத்தில், ஒரு பெண் தனது செல்ல நாயை தூக்கி, உணவு வைக்கப்பட்டிருந்த தட்டில் கொண்டு சென்று அங்கிருந்த உணவை நாய் நக்க அனுமதிப்பது தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அருகில் இருந்த வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் அதிர்ச்சியடைந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

இந்த சம்பவத்தை பார்த்த உணவக ஊழியர்கள் தொடக்கத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் திகைத்தனர். சிலர் அந்தக் காட்சியை மொபைலில் பதிவு செய்யத் தொடங்க, வாடிக்கையாளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படையாகக் காட்டினர்.

மேலும் பொது உணவு பகுதிகளில் இத்தகைய நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், பிறரின் ஆரோக்கியத்துக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும் என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.